தனது அதிகாரப்பூர்வ X தளத்தில், படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் பல பகுதிகளில் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த கடந்தகாலச் சம்பவங்கள் தொடர்பாக முறையான விசாரணைகளோ அல்லது நீதியோ இதுவரை கிடைக்கவில்லை என்று சீமான் சுட்டிக்காட்டினார் குறைந்தபட்சம் இனப்படுகொலைக்கான நீதியைக் கூட தமிழினம் பெற முடியவில்லை என்பது ஒரு பெரிய வரலாற்று சோகம் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து ஒரு சிறு குழந்தை உட்பட ஐந்து பேரின் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் உலகத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து, மக்கள் நடத்திய 'அணையா தீபம்' தொடர் போராட்டத்தின் விளைவாக யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்டார் இது தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்துள்ளது.
செம்மணி போன்ற ஏராளமான மனிதப் புதைகுழிகள் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் பரவியுள்ளன என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டில் தமிழர்கள் எந்த அளவுக்கு ஒரு பெரிய இனப்படுகொலையைச் சந்தித்திருப்பார்கள் என்பது வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






3 Comments