ஆப்பிரிக்காவின் முன்னணி தங்கம் உற்பத்தி நாடுகளில் ஒன்றான சூடானில் கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது இந்த துயரச் சம்பவத்தில் சுரங்கத்தில் பணியில் இருந்த ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டனர்.
இந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூடானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து, அப்பகுதியில் சோகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
தங்கச் சுரங்கங்களில் தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்த குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் ஒருமுறை வலு சேர்த்துள்ளது.






3 Comments