Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பாதுகாப்பாக விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களும் அவர்களது மீன்பிடி படகும் Â இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்யுமாறு இலங்கை அதிகாரிகளுடன் உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்பதே தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...