தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.
கூட்டத்தில், 2026 சட்டசபைத் தேர்தல், மக்கள் சந்திப்புச் சுற்றுப்பயணம், மற்றும் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாகக் கருத்து கேட்கவுள்ளார். மேலும், கட்சி சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்தச் செயற்குழு கூட்டத்தின் முடிவில், விஜய் தனது மக்கள் சந்திப்புச் சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments