செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்று பலரும் உறுதியாக நம்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அந்தப் பகுதியானது யுத்த காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த மயானத்தில் கடந்த காலத்தில் உடல்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. தற்போது, அங்கு தாய், சேய், இளைஞர், யுவதிகள், பெரியவர்கள் எனப் பலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு சிறுவன் புத்தகப்பையுடன் புதைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என சத்யராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய கொடூரமான செயல்களைச் செய்தவர்களிடமே நீதியைக் கேட்டால் அது கிடைக்காது என்பதால், சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும் என சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பயங்கரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.






3 Comments