இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் இந்த மோதலில் இதுவரை 55,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று செங்கடலில் பயணித்த ஒரு சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் நேற்றைய தினம் மீண்டும் ஒரு சரக்குக் கப்பலைத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சரக்குக் கப்பலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு மாலுமிகள் காயமடைந்தனர் மேலும் இரண்டு மாலுமிகள் கடலில் விழுந்ததாகவும் அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரபிக்கடல் மற்றும் செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments