Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கடலூர் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது தொடருந்து மோதிய இந்த கோர விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் பள்ளி வாகனத்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற அதிவிரைவு தொடருந்து பள்ளி வாகனம் மீது மோதி உள்ளது. தொடருந்து மோதிய வேகத்தில் பள்ளி வாகனம் சுமார் 50 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது அதில் நேர கட்டுப்பாட்டாளர் கடவையை மூட முயன்றபோது வாகன சாரதி அவசரப்படுத்தி தண்டவாளத்தை கடந்து செல்ல வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இதை மறுத்த சாரதி அங்கு எந்த பாதுகாப்பு கடவையும் போடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனயைில் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...