மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் தீவிரமானது. அதனால் ஏற்பட்ட வன்முறையால் மூன்று பேர் பாலியகி யுள்ளனர்.
மாணவர் இஜாஸ் அகமது (17), ஹர்கோவிந்த தாஸ் (65) மற்றும் சந்தன் தாஸ் (35) ஆகிய மூவரும் இதில் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
ஹர்கோவிந்த தாஸ் என்பவரின் மகன்தான் சந்தன் தாஸ். இருவரும் சொற்ப வருமானத்துடன் ஆடுகள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அவர்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
இந்த வன்முறையில் இன்னும் பலர் காயமடைந்துள்ளனர், மேலும் இதுதொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அமைதியை கடைபிடிக்குமாறு மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்
அரசியல் லாபத்துக்காக வன்முறைகளை தூண்டாதீர்கள்," என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சில கட்சிகள் "அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன" என, மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம், "தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவும், பள்ளி ஆசிரியர்கள் 26,000 பேர் வேலை இழப்பதை திசைதிருப்பவும் வன்முறையை தூண்டுவதாக" திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிட தக்கது






3 Comments