Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஐரோப்பாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக 2,300 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகள் கடந்த மாதம் தொடங்கிய கோடைக்காலம் முதல் வரலாறு காணாத கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன பிரான்ஸ், ஸ்பெயின் போர்ச்சுகல் மட்டுமின்றி சுவிட்சர்லாந்து பின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளிலும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 105 டிகிரி செல்சியஸ் வரையும் ஸ்பெயினில் 106 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் வாட்டி வதைத்தது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவாக ஸ்பெயினுக்கு அருகே உள்ள போர்ச்சுகலின் லிஸ்பன் மாகாணத்தில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்தக் கடுமையான வெப்ப அலையைச் சமாளிக்க இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது.

குறிப்பாக, பிரான்சின் மெட்டியோ நகரம் மற்றும் ஜெர்மனியின் முனிச் ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது மேலும் அரசு அலுவலகங்கள் வங்கிகள் வணிக வளாகங்கள் ஆகியவை பகுதிநேரமாகவே செயல்பட்டு வருகின்றன.

நகரங்களில் உள்ள பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் பம்புகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இளைப்பாற அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ உருவாகி பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட ஐரோப்பாவில் ஏற்கனவே சுமார் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் தொழில்புரட்சி புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களாலேயே இந்த வெப்ப அலைகள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தச் சூழ்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 2,300 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...