ஈராக் நாட்டில் அல் குட் நகரில் உள்ள ஒரு பல் அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர்.
பலர் படுகாயமடைந்தனர் இந்த தீ விபத்தை அல் குட் நகர் அமைந்துள்ள வாசிட் மாகாண ஆளுநர் முகமது அல் மியாஹி உறுதிப்படுத்தியுள்ளார்.
வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஐ தொட்டுள்ளதோடு பலர் பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாக உறுதியாகவில்லை என்று ஆளுநர் முகமது அல் மியாஹி கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வணிக நிறுவனம் ஒன்றில் தீ கொளுந்துவிட்டு எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிற நிலையில் ஆனால் இந்த வீடியோ ஈராக் வணிக வளாக விபத்து வீடியோ என்பதை இன்னும் அரசுத் தரப்போ ஈராக் ஊடகமோ உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments