கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பேஸ்புக்கில் மெட்டா வெளியிட்ட தானியங்கி மொழிபெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அண்மையில் பெங்களூருவில் காலமானார் அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் சரோஜா தேவியின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில்.
இது தொடர்பான பதிவை முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்ததோடு.
அதில் மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார் என்று கன்னடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் அந்த பதிவை தானியங்கி வசதி மூலம் மொழிபெயர்த்த மெட்டா கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.
இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமை குய்பிடத்தக்கது.






3 Comments