காசாவில் பசியால் வாடும் பாலஸ்தீனியர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதோடு.
இஸ்ரேலியத் தாக்குதல்களில் தினசரி உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டும் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும்.
ஹமாஸின் இராணுவப் பிரிவு தங்களின் போராளிகள் ஒரு நீண்ட போருக்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில்.
ஹமாஸின் இராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் காசாவில் பணயக் கைதிகளாக உள்ள அனைவரையும் விடுவிப்பதை உள்ளடக்கிய ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிராகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் நீண்ட காலப் போராட்டத்திற்கு ஹமாஸ் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார் போர் முடிவுக்கு வருவதை உறுதி செய்யும் இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதை உறுதி செய்யும் மற்றும் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்யும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments