நாட்டின் வடக்கே உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான ஹா லாங் விரிகுடாவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான பயணிகள் தலைநகர் ஹனோயிலிருந்து வருகை தந்த வியட்நாமிய குடும்பங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு.
பலத்த மழையின் மத்தியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதில் இடையூறாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
குறைந்தது 34 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் கூறப்படுகிறது இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும்.
இந்த படகு நேற்று மாலை 53 பேருடன் பயணித்த போது விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments