வடக்கு காசாவில் ஐக்கிய நாடுகளின் உணவு பாரவூர்திகளுக்காகக் காத்திருந்த குறைந்தது 67 பேரை இஸ்ரேலிய இராணுவம் சுட்டுக் கொன்றதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.
உணவுக்காக பெருமளவான மக்கள் குறித்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தபோதே இஸ்ரேலிய படைகள் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
இதேவேளை காசாவில் பட்டினியினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 பேர் பலியானதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பசியால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் தண்ணீர் மற்றும் உப்பை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் காசாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 93 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments