அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பராக் ஒபாமாவை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் கைது செய்வது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு காணொளியை டொனால்ட் டிரம் தனது 'ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இது அமெரிக்க அரசியல் அரங்கில் எதிர்வினைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
'டீப்ஃபேக்' தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த காணொளி ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று கடுமையாகக் கண்டனம் எழும்பிவருகின்றது.
அண்மையில் 2016 தேர்தல் முடிவை பாதிக்கும் முயற்சியில் ஒபாமாவும் மூத்த உளவுத்துறை அதிகாரிகளும் டிரம்ப்-ரஷ்யா கூட்டுக் கதையை ஜோடித்ததாகக் கூறும் 100 க்கும் மேற்பட்ட ஆவணங்களை துளசி கப்பார்ட் வெளியிட்டார்.
ஒபாமா பதவி விலகுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேசத்துரோக சதி என்று அவர் இதை விவரித்தார்.
ரஷ்யா அமெரிக்காவின் தேர்தலை பாதிக்கும் நோக்கமும் திறனும் இரண்டையும் கொண்டிருக்கவில்லை என்ற முந்தைய மதிப்பீடுகளுக்கு முரணாக, டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்ய தலையீட்டை தவறாகக் கூறுவதற்காக உளவுத்துறை சிதைக்கப்பட்டதாக கப்பார்ட் குற்றம் சாட்டுகிறார்.
டிரம்பின் ஜனாதிபதி பதவியை சட்டவிரோதமாக்குவதற்கான பல வருட முயற்சிக்கு இந்த புனையப்பட்ட கதை அடித்தளமிட்டதாக தேசிய புலனாய்வு இயக்குநரான துளசி கப்பார்டின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்தனொளி வெளியாகியுள்ளது.






3 Comments