Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

விமான விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

நேற்று பிற்பகல் உள்ளூர்நேரப்படி 1:06 மணியளவில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி கல்லூரியின் ஹைதர் ஹால் கேன்டீன் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது இருந்துள்ளது.

இந்த விபத்தில் விமானி பிளைட் லெப்டினன்ட் தவ்கிர் இஸ்லாம் சாகர் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் மாணவர்கள் தீக்காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானம் புறப்பட்ட உடனேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் விபத்தின் சரியான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

பங்களாதேஷ் இராணுவம் எல்லைக் காவல் படை (BGB) மற்றும் தீயணைப்பு படையின் ஒன்பது பிரிவுகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரியில் சுமார் 2,000 மாணவர்கள் பயில்கின்றனர் மழலையர் பிரிவு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. விபத்து நடந்தபோது மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்தனர்.

பங்களாதேஷின் இடைக்கால அரசுத் தலைவர் முஹம்மது யூனுஸ் இந்த விபத்தை "பேரழிவு" என்று வர்ணித்ததுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு உதவி வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி ஜூலை 22 இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...