Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சீமானுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவு!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான்கு வாரங்களுக்குள் புதிய கடவுச்சீட்டை வழங்குமாறு கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சீமானின் புதிய கடவுச்சீட்டு விண்ணப்பம் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்.

தனது மனுவில் வெளிநாட்டுப் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது தனது கடவுச்சீட்டைக் காணவில்லை என்றும் பல முயற்சிகளுக்குப் பிறகும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சீமான் குறிப்பிட்டிருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தபோது அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளதைக் காரணம் காட்டி மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததோடு.

இந்த நிராகரிப்பு உத்தரவை ரத்துசெய்து புதிய கடவுச்சீட்டு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு சீமான் நீதிமன்றத்தில் கோரியிருந்த நிலையில்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். விசாரணையின்போது, சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர்,l சீமான் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் புதிய கடவுச்சீட்டு வழங்குவதை மறுப்பதற்கு அவை காரணமாக அமையக்கூடாது என்றும் வாதிட்ட நிலையில்
மனு மற்றும் வாதங்களை கவனமாகப் பரிசீலித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சீமானின் விண்ணப்பத்தை பரிசீலித்து நான்கு வாரங்களுக்குள் அவருக்கு புதிய கடவுச்சீட்டை வழங்குமாறு மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு,வழக்கை முடித்துவைத்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...