ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் இறந்துவிட்டதாக அவசர சேவைகளின் முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்ய அதிகாரிகள் முன்னதாக ஒரு தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் விமானத்தின் எரியும் இடிபாடுகளைக் கண்டுபிடித்ததாகக் கூறினர்.
இந்த விமானம் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது அதில் 6 பணியாளர்கள் இருந்தனர் எனவும் ரஷ்ய அறிக்கைகளின்படி விமானியின் பிழை மற்றும் குறைந்த தெரிவுநிலை ஆகியவை விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.






3 Comments