Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

பட்டினியால் பலியாகும் உயிர்கள்!

இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் காரணமாக காசா கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது பட்டினி காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன காசாவில் மூன்றில் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாக ஐநா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவி திட்டம் இதனை கூறியிருக்கிறது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

காசாவுக்குள் அனைத்து பொருட்களும் இஸ்ரேல் வழியாகவே செல்கின்றன ஆனால் இஸ்ரேல் அனுமதி மறுப்பதால் உலக நாடுகள் அனுப்பிய உதவிகள் உள்ளே சென்று சேராமல் இருக்கிற நிலையில்.

உதவிப் பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்வதற்கு வேறு வழியில்லா நிலையில் காசாவுக்குள் உணவுப் பொருட்களை விமானம் மூலம் வீச இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உணவுப் பொருட்களை வீச இன்னும் இஸ்ரேல் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுகிறது இஸ்ரேல் அரசின் இந்த நடவடிக்கையை ஐ.நா. விமர்சித்துள்ளது காசாவுக்குள் உதவிப் பொருட்கள் செல்வதற்கான தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன காசாவில் மனிதாபிமான பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது என்றும் இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த நாடுகள் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...