Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தமிழக வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளோம்!

தமிழகத்தின் வளர்ச்சி மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை விடவும் மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது என்று தூத்துக்குடியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு திறந்து வைத்தார் 4,874 கோடி ரூபா மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார் பிரிட்டன் மற்றும் மாலைதீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி இந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

வணக்கம் என தமிழில் சொல்லி தனது உரையை தொடங்கி
தமிழகத்தின் வளர்ச்சி மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாவை மத்திய அரசு அளித்திருக்கிறது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன முதன்முறையாக கரையோர மீன்பிடி துறைமுகங்களுக்கு இத்தனை கரிசனத்தையும் அக்கறையையும் யாரும் வெளிப்படுத்தவில்லை உங்களிடம் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன் என்று தெரிவித்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...