யுக்ரைனுடனான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ள புதிய காலக்கெடுவை யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வரவேற்றுள்ள நிலையில்.
ட்ரம்பின் இந்த தெளிவான நிலைப்பாடு அமைதிக்கான வலிமையை அதிகரிக்கும் என்று செலென்ஸ்கி தெரிவித்தார்.
உயிர்களைக் காப்பாற்றுவதிலும் இந்த பயங்கரமான போரை நிறுத்துவதிலும் ஜனாதிபதி ட்ரம்ப் கவனம் செலுத்தியமைக்கு தாம் நன்றி கூறுவதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த காலக்கெடு குறித்து ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ பதில் எதிர்பார்க்கப்படுகிற நிலையில்.
இதற்கிடையில் ட்ரம்பின் இந்தக் காலக்கெடு போரை நோக்கிய ஒரு கூடுதல் படியாகும் என்று ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ்
தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை துணைத் தலைவராகச் செயற்படும் மெட்வெடேவ், ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள காலக்கெடு தொடர்பில் கருத்துரைத்துள்ளதாகவும்.
ட்ரம்ப்பின் அறிவிப்பு அமெரிக்காவுக்கு நல்ல முடிவாக இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
அவரின் புதிய இறுதி எச்சரிக்கை என்பது ஒரு அச்சுறுத்தல் மற்றும் போரை நோக்கிய ஒரு படியாகும் என்றும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ்
கூறியுள்ளார்.






3 Comments