ஏமன் நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில தாதியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்.
இந்தியாவின் - கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா என்ற தாதி கடந்த 2017ஆம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை விசாரணை செய்த ஏமன் நாட்டு நீதிமன்றம் நிமிஷா பிரியா கொலைக் குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்ததோடு.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் கூறியுள்ளார்.
சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ளார்.






3 Comments