ஏமன் அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடம்பெயர்வு நிறுவனம் (IOM) கூறியுள்ளது.
ஷமொத்தம் 154 பேர் பயணித்த இந்த படகு, ஏமனின் தெற்கு அப்யான் மாகாணத்தில் உள்ள கான்ஃபார் மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை கடலுக்கு புறப்பட்டு அரபு வளைகுடா நாடுகளை அடைய முயன்றபோது விபத்துக்குள்ளானது இதில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் ஜிஞ்சிபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் மேலும் 54 உடல்கள் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி புறப்படும் குடியேறிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். கடந்த மாதங்களிலும் ஏமன் கடற்பகுதியில் இத்தகைய படகு விபத்துகள் பல நிகழ்ந்துள்ளன மார்ச் மாத இதேபோல் நான்கு படகு விபத்தில் இருவர் உயிரிழந்தும் 186 பேர் காணாமல் போனதாகவும் IOM தெரிவித்துள்ளது மனிதக் கடத்தலின் பயங்கரமான விளைவுகளை இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments