துருக்கியின் மேற்குப் பகுதியில் இன்று இரவு 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இதன் மையப்பகுதி மேற்கு துருக்கியில் 11 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக ஜெர்மன் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வடமேற்கு மாநிலமான பாலிகெசிர் உட்பட பல பகுதிகளில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து தரைமட்டமாகின நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இஸ்தான்புல் நகரம் வரையிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்த நிலையில்.
மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது நிலநடுக்கத்தில் காயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட 81 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
துருக்கியில் 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






3 Comments