Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கோவையில் தரையிறங்கிய கொச்சி சென்ற துபாய் விமானம்!

மோசமான வானிலை காரணமாக, துபாயிலிருந்து கொச்சி செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் கோயம்புத்தூருக்குத் திருப்பிவிடப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், நீண்ட நேரம் உணவு, தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர்.

மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் கோவையில் தரையிறங்கியதால், பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர். இது தொடர்பாக விமான நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது. இதனால், கொச்சிக்கு வரவிருந்த பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு புறப்பட்டு கொச்சிக்கு இரவு 7:30 மணிக்கு வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், வானிலை காரணமாக கோவை விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

விமானம் கோவைக்கு வந்தடைந்த பிறகு, பயணிகளை விமானத்திலேயே அமர வைத்ததாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் வழங்கவில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டினர். துபாய்  விமான நிலையத்திற்கு நேற்று காலை 9 மணிக்கு வந்ததாகவும், இரவு 12 மணி கடந்த பின்னரும் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாகவும் கூறி பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகளின் தொடர் வாக்குவாதத்திற்குப் பிறகு, நள்ளிரவு 2 மணியளவில் அவர்களுக்குப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, கோவையிலிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, பயணிகள் விமான ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி, விமான சேவை நிறுவனங்கள் இதுபோன்ற அவசர காலங்களில் பயணிகளைக் கவனித்துக் கொள்ளும் விதம் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...