காசா அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 62,000 பாலஸ்தீனியர்களில் குறைந்தது 18,885 குழந்தைகள் அடங்குவர்.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனம் இஸ்ரேலின் அத்தியாவசிய உதவி மற்றும் மருத்துவப் பொருட்கள் மீதான முற்றுகை காரணமாக காசாவில் பட்டினி பரவலாக உள்ளது என எச்சரித்துள்ளது.
இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதால், ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிகள், லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களுக்குத் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் UNRWA தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் தாக்குதல்கள்: ஹமாஸ் ஏற்றுக் கொண்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதியற்ற நிலையில் உள்ளபோதிலும் பல மக்கள் சிக்கியுள்ள காசா நகர் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இதே செய்தியில் இஸ்ரேலியர்கள் காசா போரை முடிவுக்குக் கொண்டுவரப் போராடுவதாகவும் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.






3 Comments