நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்து ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்.
சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம் ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நேற்று பிற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில்.
டல்லுவில் உள்ள நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர் இதில் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டாதாகவும் பலத்த தீக்காயங்களுடன் அவரை அவரது உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






3 Comments