டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 9-க்கு பிறகு மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப சமர்பிக்காதவர்களின் பெயர் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும் பட்டியலில் இடம் பெறாது என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்த புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரியில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கான 9 .76 லட்சம் படிவம் விநியோக்கப்பட்டது
இதுவரை 5.89 லட்சத்து படிவம் திரும்ப பெற பட்டுள்ளது. 2300 பூத் லெவல் ஏஜெண்டுகள் இந்த பணியின் போது உடன் உள்ளனர். ஒரு பூத்துக்கு 2 ஏஜெண்டுகள் உள்ளனர். படிவத்தை வாக்காளர்கள் கண்டிப்பாக திரும்ப கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுக்காத வாக்காளர்கள் பெயர் வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும் பட்டியலில் இடம் பெறாது. அதேபோல், படிவம் கிடைக்க பெறாத பட்சத்தில் அவர்கள் பெயரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடபடும் பட்டியலில் இடம் பெறாது.
மேலும், அப்படி பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 9-க்கு பிறகு மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் இதுவரை 2,300 விண்ணப்பம் வந்துள்ளது.” இவ்வாறு புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரிஜவகர் தெரிவித்தார்.






3 Comments