ஈரான் நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் பரவி வருகின்றன. ஆரம்பத்தில் அமைதியான முறையில் நடந்த இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள், தற்போது தீவிரமடைந்து, வன்முறைகளாகவும் மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் மற்றும் ராணுவம் விரைந்து குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் மக்களை அரசுக்கு எதிராக போராடத் தூண்டுவதாக ஈரான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரான் அரசு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில், “அமெரிக்க அரசியல் தலைவர்களின் தூண்டுதலால், நாட்டில் உள்ளமைதி சீர்குலைந்து, இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சூழ்நிலையில் ஈரான் மீது எந்தவிதமான வெளிநாட்டு தலையீடும் ஏற்க முடியாது எனவும், மக்களிடையே உள்ள அமைதியைக் காக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்காக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், “சார்ந்த நாடுகள் தூண்டுதல்களை நிறுத்தாவிட்டால், சர்வதேச சட்டங்களை மீறியதாகக் கருதப்படும்” என ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது






3 Comments