தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் மரண தண்டனை விதிக்குமாறு அந்த நாட்டின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தற்காலிகமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை தென் கொரிய அரசு சார்பான சட்ட நிபுணர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யூன் சுக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:அதிகார துஷ்பிரயோகம்;தேசத்துரோகம் ;ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைக்க முயற்சித்தல் ;சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த முயற்சி.
சட்டத்தரணிகள், “முன்னாள் ஜனாதிபதி, ஆட்சியின் போது ஜனநாயகத்தின் அடித்தளங்களை வலுக்கட்டாயமாக மாற்ற முயற்சித்தார்” என்றும், “அதிகாரத்தின் வாயிலாக நாடு முழுவதும் பயமுறுத்தல் மற்றும் ஊடக சுதந்திரத்தை அடக்க முயற்சித்தது சட்டவிரோதமானது” என்றும் வலியுறுத்தினர்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வருகிற பெப்ரவரி 19ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.






3 Comments