ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தெருவில் இறங்கி அரசுக்கும், உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனிக்கும் எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதோடு, தற்போது வரை 2571 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசின் அடக்குமுறைகள் மற்றும் பொருளாதாரத் திணிப்புகள் காரணமாக, பொதுமக்கள் நிலைமைக்கு எதிராக வலுத்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஈரான் அரசு இதற்குப் பதிலளிக்கும்படி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தீவிரமான இந்த நிலைமையில், ஈரானின் உள்நிலை அபாயகரமாக காணப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.






3 Comments