மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் உயர்ந்த பதட்டம் மற்றும் ஈரான் தொடர்பான மோதல் சூழ்நிலை காரணமாக, கத்தார் நாட்டில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் வான் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படை மற்றும் பாதுகாப்பு துறைகள் உயர்ந்த கண்காணிப்பு நடவடிக்கைகள், வான் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றை கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமான விமானங்கள் மற்றும் தற்காப்பு குழுக்கள் அங்கே குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீதமுள்ள அமெரிக்க தளங்களிலும் பாதுகாப்பு நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் சமாளிக்க உயர் நிலையில் தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.






3 Comments