Â
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால்,
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது
பதில் தாக்குதல் நடத்தப்படும் என
ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கில் உள்ள முக்கிய இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கா தனது பணியாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஈரான் தனது நிலைப்பாட்டை சவுதி அரேபியா,
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நாடுகளின் மண்ணைப் பயன்படுத்தி அமெரிக்கா ஈரானை தாக்கும் பட்சத்தில் அங்கு அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் நேரடியாக இலக்கு வைக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.






3 Comments