Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

கரீபியன் கடலில் வெனிசுவேலா எண்ணெய் கப்பல் கைப்பற்றல்!

வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில் ஆறாவது எண்ணெய் கொள்கலன் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த நடவடிக்கை அதிகாலை நேரத்தில் எந்தவித மோதலுமின்றி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வெரோனிகா’ என பெயரிடப்பட்ட இந்த கப்பல், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வெனிசுவேலா மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையினர் மற்றும் வீரர்கள் இணைந்து கப்பலை தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இது குறித்து US Southern Command சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வெனிசுவேலாவிலிருந்து சட்டபூர்வமாகவும் முறையாகவும் ஒருங்கிணைக்கப்படும் எண்ணெய் மட்டுமே இனி வெளியேற அனுமதிக்கப்படும்” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கயானா நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த வெரோனிகா கப்பல், முன்பு ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தடை செய்யப்பட்ட எண்ணெய்யைக் கடத்துவதற்காக 1,000-க்கும் மேற்பட்ட ‘நிழல் கப்பல்கள்’ செயல்பட்டு வருவதாக அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்த மாதத் தொடக்கத்தில் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வெனிசுவேலா எண்ணெய்யை அமெரிக்கா முதன்முறையாக விற்பனை செய்து முடித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், வெனிசுவேலா–அமெரிக்கா இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார மோதல் மேலும் தீவிரமடையும் சூழ்நிலையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...