அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர் ஈரானில் நிலவி வரும் தற்போதைய போர்ச் சூழல் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது இந்த உரையாடல் "வெளிப்படையானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும்" அமைந்ததாக கிரெம்ளின் கூறியுள்ளார் .
இரண்டு தலைவர்களும் தமது கலந்துரையாடலின்போது, ஈரானுடனான மோதல் குறித்தும், யுக்ரைன் நிலவரம் தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர் ஈரானிய மோதலுக்கு விரைவான அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வை எட்டுவதற்கான பல யோசனைகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வைத்துள்ளதாக அவரது இராஜதந்திர ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளின் தலைவர்கள் ஈரானிய ஜனாதிபதி மற்றும் ஏனைய சர்வதேசத் தலைவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் இந்த முன்மொழிவுகள். ரஷ்ய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலகளாவிய எண்ணெய் சந்தையின் பின்னணியில், வெனிசுலாவின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கை மற்றும் அதற்குப் பதிலடியாக பிராந்தியமெங்கும் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.






3 Comments