ஈரானில் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களின் பின்னர் சில பகுதிகளில் “கருப்பு மழை” பெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என World Health Organization எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய் நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளால் வளிமண்டலத்தில் அதிக அளவில் ஹைட்ரோகார்பன், சல்பர் ஆக்சைடு, நைட்ரஜன் சேர்மங்கள் போன்ற நச்சு வாயுக்கள் மற்றும் கரிமத் துகள்கள் வெளியேறியுள்ளன. இத்துகள்கள் மழைநீருடன் கலந்து கருமையான அல்லது எண்ணெய் கலந்த மழையாக பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருப்பு மழை மற்றும் மாசடைந்த காற்று மூச்சுத்திணறல், கண்-தோல் எரிச்சல், தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், நீண்டகாலமாக இது பாதித்தால் சில நோய்களின் அபாயமும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லாமல் வீடுகளில் தங்கிக்கொள்ளவும், மழைநீருடன் நேரடி தொடர்பை தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அபூர்வமான “கருப்பு மழை” நிகழ்வு, போர் மற்றும் தொழில்துறை தீ விபத்துகளின் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.






3 Comments