அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் பிரவுன்ஸ்வில் துறைமுகத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக Donald Trump அறிவித்துள்ளார். இந்த திட்டம் இந்தியாவின் Reliance Industries நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அமையவுள்ள இந்த திட்டம் அமெரிக்காவின் எரிசக்தித் துறையில் ஒரு முக்கிய முதலீடாக கருதப்படுகிறது. பிரவுன்ஸ்வில் துறைமுகத்தில் அமைக்கப்படும் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் அமைக்கப்படும் முதல் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இது தெற்கு டெக்சாஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தால் உலகளவில் எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments