ஈரானில் நடைபெற்று வரும் போர்நிலையை முடிவுக்கு கொண்டு வர நடுவர் பங்காற்றத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உடன் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த உரையாடலில், ஈரான் போரை விரைவாக முடிக்கக்கூடிய சில யோசனைகளை புடின் முன்வைத்ததாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியையும் எண்ணெய் விலை உயர்வையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் புடின் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், புடினுடன் நல்ல உரையாடல் நடந்ததாக கூறியுள்ளதுடன், அவர் ஈரான் பிரச்சினையில் உதவ முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், முதலில் ரஷ்யா-உக்ரைன் போரையே முடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷ்யா நடுவராக செயல்பட முன்வந்துள்ளது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.






3 Comments