தமிழகத்தில் வளர்ச்சியை பரவலாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வோம் என தமிழக முதல்வர் M. K. Stalin தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிட மாடல் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பல டைடல் பார்க் மற்றும் நியோ டைடல் பார்க் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பட்டாபிராம் டைடல் பார்க் விரைவாக முடித்து திறக்கப்பட்டதுடன், விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பார்க்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மதுரை மற்றும் திருச்சி நகரங்களில் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் டைடல் பார்க்கள் அமைக்கப்படவுள்ளதுடன், திருவண்ணாமலை, நாகர்கோயில், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் புதிய நியோ டைடல் பார்க் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வளர்ச்சியை மாநிலம் முழுவதும் பரவலாக்கி அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவதே அரசின் நோக்கம் எனவும், “மாபெரும் தமிழ்க்கனவை நனவாக்குவோம்” என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.






3 Comments