மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மூன்று முக்கிய நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
முதலாவது நிபந்தனையாக, ஈரானின் பாதுகாப்பு மற்றும் அணு தொழில்நுட்ப தொடர்பான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இரண்டாவது நிபந்தனையாக, போர் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
மூன்றாவது நிபந்தனையாக, எதிர்காலத்தில் ஈரானுக்கு மீண்டும் தாக்குதல் நடத்தாது என்ற சர்வதேச உத்தரவாதத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
Â
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போரை நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலக நாடுகள் கவலையுடன் நிலைமையை கவனித்து வருகின்றன.






3 Comments