அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலாக, ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியதால் உலகளாவிய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு எதிராக ஈரான் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலின் பின்னணியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்த போர் காரணமாக உலகளாவியe எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் கடல்சந்தி வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து தடைபட்டதால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் உலக பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகளிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போர் மேலும் நீடித்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரிய நெருக்கடி உருவாகும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.






3 Comments