தெற்கு லெபனானின் 'மெய்ஸ் அல்-ஜபால்' பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படைகளின் நேபாள பட்டாலியன் தலைமையகம் மீது இஸ்ரேலியத் துருப்புக்கள் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளன.
அமைதிப்படை தங்கியிருக்கும் வளாகத்திற்குள் இஸ்ரேலிய ஷெல்கள் விழுந்து வெடித்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலில் நேபாளத்தைச் சேர்ந்த எந்தவொரு வீரருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலை பெய்ரூட்டில் உள்ள நேபாள கௌரவத் தூதரகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐநா அமைதிப்படை நிலைகளை இலக்கு வைப்பது சர்வதேச சட்டங்களின் கடுமையான மீறலாகும்.தெற்கு லெபனானில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்த, நேபாள வீரர்கள் பல ஆண்டுகளாகக் கடமை மற்றும் ஒழுக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐநா அமைதிப்படையினர் சர்வதேச சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இத்தகைய தாக்குதல்கள், போர்ச் சூழலில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் அமைதிப்படையினரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக மனிதாபிமான ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.






3 Comments