இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான டேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதில் வழங்கப்படும் என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி எச்சரித்துள்ளார்.
போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டேனா கப்பலின் பெயரும் அதில் பணியாற்றிய கடற்படையினரின் உயிர்தியாகமும் ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் கடற்படை வலிமையை மேலும் பலப்படுத்துவதற்கும் உறுதியுடன் செயல்படுவதாக அமீர் ஹதாமி வலியுறுத்தினார்.






3 Comments