உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாமின் சில்சார் நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.23,550 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘உலகம் முழுவதும் போர்களை எதிர்கொண்டு வரும் நிலையில் நாட்டு மக்கள் மீது அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். காங்கிரஸ் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் இருந்து தவறிவிட்டது மாறாக மக்களிடையே பீதியை உருவாக்கவே அது முயல்கிறது எனவும்
முழு உலகமும் செயற்கை நுண்ணறிவு துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற உச்சி மாநாடடு வெற்றிகரமாக இருந்தது. இந்த உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆடையை கிழத்துக்கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிய நிலையில் .
இதன்மூலம் நாட்டையே அக்கட்சி அவமானப்படுத்த முயன்றது. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த ஆபாச போராட்டத்தைக் கண்டித்தார்கள். ஆனால், காங்கிரஸின் ராஜ குடும்பம் மட்டும் தங்கள் செயலை நினைத்து தங்களுக்குத் தாங்களே முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டிக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியிடம் தங்கள் சொந்த ஆடைகளைக் கிழித்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் மிச்சமில்லை.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருகிறது. அவர்களின் தோல்வி எண்ணிக்கை விரைவில் 100-ஐ தொடும். தொடர் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக அக்கட்சி தேசத்துக்கு எதிராக ஒரு போர்க்களத்தையே தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில் .
வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி எவ்வாறு தனித்து விட்டுவிட்டதோ அதேபோன்று, பராக் பள்ளத்தாக்கை பலவீனப்படுத்துவதிலும் அது முக்கிய பங்காற்றியது. இந்தியா சுந்திரம் அடைந்தபோது பராக் பள்ளத்தாக்குக்கு இருந்த கடல்வழித் தொடர்பை துண்டிக்கும் வகையில் எல்லை வரையறுக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி அனுமதித்தது. ஒரு காலத்தில் தொழில் மையமாகத் திகழ்ந்த பராக் பள்ளத்தாக்கு தனது அடிப்படை வலிமையை இழந்துவிட்டது இன்று அதை மாற்றியமைக்கும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது எனÂ
கூறியுள்ளார் .






3 Comments