ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் மோதல் தொடர்பாக இரு தரப்பும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
ஈரானிய அதிகாரிகள் தெரிவித்ததாவது, போரில் ஏற்பட்ட ஒவ்வொரு சேதத்திற்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்க படைகள் மத்திய கிழக்கிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை போர் முடிவடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மறுபுறம், அமெரிக்கா தனது இராணுவ இலக்குகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது. முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளும் பிராந்திய பாதுகாப்பும் பாதிக்கப்படலாம் என்ற கவலையை உலக நாடுகள் வெளியிட்டுள்ளன.






3 Comments