ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிக்கும் நோக்கில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய ஆளில்லா வானூர்திகளைப் போன்ற போலி ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துகின்றன என ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ இராணுவ தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானில் தயாரிக்கப்படும் ‘ஷாஹெட் வகை ஆளில்லா வானூர்திகளைப் போன்ற தோற்றம் கொண்ட ‘லூகாஸ் வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி, குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் இவ்வாறான போலியான ஆளில்லா வானூர்திகள் மூலமே நடத்தப்பட்டதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானுக்கும் அதன் அண்டை மற்றும் நட்பு நாடுகளுக்கும் இடையில் பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கப்படுவதாகவும் ஈரானிய இராணுவ தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.






3 Comments