Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

அலி கமேனி,மொஜ்தபா கமேனி பதவி ஏற்பதில் தயக்கம்!

ரானின் முன்னாள் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது மகன் தனக்குப் பதிலாகப் பதவியேற்பது குறித்துத் தயக்கங்களைக் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புதிய உளவுத் தகவல்கள் அறிவிக்கின்றன.

அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி இதனைத் தெரிவித்துள்ளது. தனது மகன் மொஜ்தபா கமேனி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து கமேனி தயக்கம் கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொஜ்தபா அதிக புத்திசாலி இல்லை என்றும் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் கருதப்பட்டதே இதற்குக் காரணம் எனவும் மறைந்த அதி உயர் தலைவர் தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பதை அறிந்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவல்கள் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரைச் சார்ந்த ஒரு சிறிய வட்டத்திற்கு பகிரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் அறிவித்துள்ளது.

56 வயதான அயதுல்லா மொஜ்தபா கமேனி கடந்த வார இறுதியில் ஈரானின் புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...