மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததோடு, 200 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இதற்கான பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் கடந்த மூன்று வாரங்களாகத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில்.
இதில் அமெரிக்காவின் போர் ஜெட் வானூர்திகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன தற்போதைய மோதலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளதோடு அவற்றில் அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானில் 200 பெண்கள், 200 குழந்தைகள் உட்பட 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்10,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் பதிலடித் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலியானதுடன், 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 180 பேர் சிகிச்சையின் பின் பணிக்குத் திரும்பியுள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் இஸ்ரேலில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததுடன் லெபனானில் 886 பேர் உயிரிழந்ததோடு, 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments