இஸ்ரேலின் மத்திய பகுதியில் ரமத் கான் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்குப் பின்னர் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
Magen David Adom அறிவிப்பின்படி தடுக்கப்பட்ட ஏவுகணையிலிருந்து சிதறிய உலோகத் துண்டுகள் விழுந்ததால்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் கட்டிட சேதங்களும் பதிவாகியுள்ளன இந்த தாக்குதல்கள் இரான் தனது மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக மேற்கொண்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் கூட பெரும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதையும் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது.






3 Comments