இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்பு துணைத் தலைவர் அலிரேசா பயாத் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில், மூத்த தலைவர் அலி லரிஜானியுடன் சேர்ந்து அவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
அரசு செய்தி நிறுவனம் அவரை அமைதியாக செயல்பட்ட திறமையான நிர்வாகி என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் இணைவதற்கு முன்பு, அவர் ஈரானின் ஹஜ் மற்றும் யாத்திரை அமைப்பின் தலைவராக பணியாற்றியிருந்தார். மேலும், நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தார்.
இந்த தாக்குதல், ஈரானின் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






3 Comments